தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு
தனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல மொழிகளில் ஜெகபதிபாபுநடித்துள்ளார். தமிழில் தாண்டவம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம், லாபம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெகபதி பாபு அளித்துள்ள பேட்டியில், “நான் சினிமா துறைக்கு வந்து இப்போது 35 ஆண்டுகள் ஆகிறது. சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்கு நினைவில் இருக்கும் ஒரு கசப்பான அனுபவத்தை சொல்கிறேன். சாகசம் என்ற படத்தில் நான் இரண்டாவது ஹீரோவாக நடித்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏழு நாட்கள் எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை. சாப்பிட்டாயா என்று கூட கேட்கவில்லை. என் நிலைமையை பார்த்து லைட் பாய் கண்ணீர் வடித்தார். அந்த அவமானம் எனக்கு நல்ல பாடம் கற்பித்தது. இங்கேயே இருப்பான் எப்படியோ படம் கொடுத்தால் செய்வான் என்று என்னை கேவலமாக பார்த்தார்கள்.
இதர மொழிகளில் நடித்துவிட்டு வந்தால்தான் இங்கே நடிகர்களுக்கு மரியாதை தருவார்கள் என்பது புரிந்தது. எனது சிறிய மகளிடம் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னேன். திருமணம் என்ற சம்பிரதாயத்தையே நான் நம்புவதில்லை. திருமணம், குழந்தைகள், அவர்களின் பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னாலேயே இருப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்
வில்லன் நடிகர் ஜெகபதிபாபுவின் விரக்தி பேட்டி ஏன் தெரியுமா?








