• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரின்ஸ்-தமிழகத்தில் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ByA.Tamilselvan

Oct 22, 2022

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் ஆவர். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.முற்போக்கான தந்தை சாதி, மதம் கடந்து காதலிக்கச் சொன்னதன்படி மகன் சாதி, மதம், நிறம், அப்படியே கன்ட்ரி அதாங்க நாடு கடந்து காதலித்தால் அதுவே ‘பிரின்ஸ்’.தனக்கு கைவந்த காமெடி ஜானரையே மீண்டும் தேர்வு செய்து அப்பாவித்தனமான முகபாவனைகள், அதைத் தாண்டிய நடனம் என தான் ஒரு பக்கா கமர்ஷியல் + ஃபேமிலி என்டர்டெயினர் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன் .
ரின்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு டேபிள் Profit என்று தகவல் வெளிவந்தது.இந்நிலையில், இப்படம் முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் சுமார் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.