• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..

Byகாயத்ரி

May 27, 2022

பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் தான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் அக்ஷய் குமார் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். இருந்தபோதிலும் நடிகர்கள் அக்ஷய் தேவ்கன், ஷாருக்கான் மீது தொடர்ந்து இந்த மாதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் கர்காவ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தட்கன் என்னும் மாணவி இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கன் ஆகிய இருவருக்கும் 5 ரூபாய் மணியார்டர் உடன் கடிதமொன்றை எழுதி இருக்கின்றார். அதனோடு ஐந்து ரூபாய்க்கான மணியார்டர்ரையும் அனுப்பி இருக்கின்றார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, உங்கள் கையில் இருந்து ஒரு பான்மசாலா பாக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதற்காக நான் உங்களுக்கு ஐந்து ரூபாய் மணியார்டர் செய்து இருக்கின்றேன். நீங்கள் இருவரும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள். ஆனால் தற்போது நீங்கள் பான் மசாலா விளம்பரம் செய்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் ஏற்கனவே ட்வீட் செய்தேன். ஆனால் அதனால் எந்தவிதமான பயனும் இல்லை. இதனால் சகோதர சகோதரிகளுக்கான சிறப்பு நாளில் இந்த கடிதத்தை நான் உங்கள் இருவருக்கும் எழுதி அனுப்புகின்றேன். எனக்கு சகோதர, சகோதரிகள் இல்லை. எங்கள் வீட்டில் நான் ஒரே பிள்ளை தான் என்றும் அதில் கூறியுள்ளார்.