• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை பேரூராட்சி காளியம்மன் கோவில் தெரு, முனியாண்டி கோவில் தெரு, தெற்கு மாரியம்மன் கோவில் தெரு, ஆதி காலனி, ஓம் சக்தி கோவில் தெரு, முள்ளாம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக வேட்பாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பொதுமக்களிடம் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசிய போது கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தப்பட்டது.

இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியல் உயர் கல்வியில் காலத்துக்கு ஏற்றவாறு தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக்கொள்ள இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி விட்டார்கள்.

மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, மற்றும் சிறு பெண் குழந்தைகள் முதல் பெரியபெண்கள் வரை தனியாக செல்ல முடியாத நிலையில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.

னைத்து தரப்பு மக்களும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தனர்.

முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம்
ரூ.1,200 இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பணிக்குச் செல்லும் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம்வரை மானியம் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்

ரூ. 7½ லட்சம் மதிப்பீட்டில் அம்மா இல்லம் திட்டம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அனைத்து குடும்பத்திற்கு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக கூறியுள்ளது கூறிய அனைத்து வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சி மீண்டும் பதவி ஏற்றவுடன் நிறைவேற்றப்படும்.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, வருமானத்தை அதிகரிக்க,
உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்க 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

மக்களாகிய உங்களிடம் பலர் வாக்கு கேட்டு வருவார்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவி எப்படி இருக்கும் என்ற ஆசையில் வருகிறார்கள் ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

நான் முதலமைச்சராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது 5 ஆண்டுகளாக வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது மக்களுக்காக அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் மனசாட்சியோடு சட்டமன்றத்தில் பேசி குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுத்தேன்.

இந்தத் தேர்தலில் திமுக போய் தேர்தல் வாக்குறுதி எடுபடாது. மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார். அதன் பிறகு மக்கள் மிக மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

நான் அரசு டாக்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுக தேர்தலுக்களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பல்வேறு இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அனைத்தது மக்களுக்கும் செய்துள்ளேன். எனக்கு அரசியலில் அனுபவம் உள்ளது.

என்றும் மக்களுடன் துணை நின்று மக்களின் குரலை கனிவோடு கேட்டு மக்களின் தேவைகளை உணர்ந்தும், அவர்களின் கோரிக்கைகளை புரிந்து செயல்படுத்தி, வேடசந்தூரில் பசுமைப் புரட்சியை உருவாக்கும் வளர்ச்சி பயணமாக முன்னேறுவேன்.

உங்கள் பேராதரவுடன், வேடசந்தூரின் குரலாக மீண்டும் சட்டமன்றத்தில் நிச்சயம் ஒலிப்பேன் அதற்கு அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலை சின்னத்திற்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.

உடன் அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் டி.சி.ராஜ்மோகன், வடமதுரை பேரூர் செயலாளர் பி.டி.ஆர்.பாலசுப்பிரமணியம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்திக் மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.