வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர். ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம் பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் தாயில்பட்டி ஊராட்சியில் மண்குண்டாம்பட்டி, கலைஞர் காலனி ராமலிங்கபுரம், பச்சையாபுரம், பகுதியில்
உள்ள வாக்குசாவடியில் பரப்புரை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையிலும், ஒன்றிய துணை செயலாளர் சந் தனம் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய பொரு ளாளர் விவேகனந்தன் , வரவேற்று பேசினார். தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேசன், நேர்முக உதவியாளர் முத்துராஜ், மற்றும் தாயில்பட்டி ஊராட்சி கிளைச் செயலாளர்கள் ஒன்றிய பிரதிநிதிகள், கழக மாவட்ட கழக பிற மகளிரணியினர், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் பேசியது


கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக மகளிர் காண ஊக்கத்தொகை கட்டணமில்லாத பஸ் வசதி . பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன அதனை மக்களிடத்தில் கொண்டு சென்றாலே திமுக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பார். பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் செய்யாததை செய்தது போன்று நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை திமுக அரசு செய்த சாதனைகளை வீடு வீடாக சொன்னால் மட்டும் போதும் என கூறினார்.




