• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம்

ByG.Ranjan

Jul 28, 2024

திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் இளைஞரணி சார்பாக சமூக வலையதள பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சமூகவலை பயிற்சி முகாம் நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை யின் பேரில் இளைஞர் அணியின் மாவட்ட , மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைத்தள பயிற்சி முகாம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணரில் நடைபெற்றது. நிதி மற்றும் மனித பல மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். கழக மருத்துவ அணி செயலாளர் எழிலன் முகாமில் சிறப்புரை ஆற்றினார் சமூக வலைதள பயிற்சிகள குறித்து இளமாறன் விக்னேஷ் ஆனந்த் ஆகியோர் பேசினார்கள் . பயிற்சி முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிதம்பர பாரதி சேகர், ஜெகன், கார்த்தி கேயன், மஞ்சநாதன் அய்யனார், திருச்சுழி தொகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராம்பிரசாத், முத்துக்குமார், நாகமணி கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி பெரியசாமி நகர இளைஞரண நிர்வாகிகள். சரவணன், சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் சேகர் நன்றி கூறினார்.