• Fri. May 10th, 2024

நாகர்கோவிலில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து.., திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் பிரதமர், மணிப்பூர் முதல்வருக்கு எதிராக தி மு க., மகளிர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் தாய்குலத்திற்கு எதிரான மானபங்கம் பற்றியும், அன்றாட மணிப்பூர் மக்கள் படுகிற இன்னல்கள் வெளி உலகுக்கு தெரிய வண்ணம் இணைய தளங்களை வெட்கமே இல்லாது தடை செய்ய ஆணையிட்ட மாநில முதல்வருக்கும் இணக்கமாக செயல்படும் மோடி அரசின் அநாகரிகமான செயலை கண்டித்து, நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன். திமுக மகளிர் அமைப்பின் மாநில துணை செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் தலைமயில் நடைபெற்ற ஒன்றிய மோடி அரசின் மெளனத்தையும், மணிப்பூர் கடந்த 70_நாட்களாக பற்றி எரியும் நிலையில் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை காக்க தவறிய முதல்வரை மாற்றக் கோரியும், பெண்கள் மூன்று பேரை நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்து சென்று வம்பணர்ச்சியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூவரை அடையாளம் தெரிந்த நிலையிலும். ஒருவரை மட்டுமே கைது செய்து,ஏனைய இருவரையும் பாதுகாக்கும் காவல்துறையின் செயலை கண்டித்தும். திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தை. நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த மகளிர் போராட்டத்தில். மாநகராட்சி துணை மேயர் திருமதி.பிரின்சிலா, வழக்கறிஞர் ஜெனஸ் மைக்கேல், முனைவர்.லதா கண்ணன்,ஜெசிந்தா உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்று.பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, மணிப்பூர் அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *