விக்கிரமங்கலத்தில் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக விக்கிரமங்கலம் கிராமத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை காண விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமை வகித்தார். உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் மானாமதுரை நகராட்சி சேர்மனுமான மாரியப்பன் கென்னடி படிவங்களை வழங்கினார். இதில் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன், விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றதுணை தலைவர் செல்வி செல்வம், பாண்டி, மாவட்ட விவசாய அணி பி.டி.மோகன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.
மதுரை தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி
