• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் ஸ்டாலினை தாக்கிப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா

Byவிஷா

Feb 22, 2024

கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த மாதிரி பொய் செல்ற முதல்வரை பார்த்ததேயில்லை’ எனப் பேசியிருப்பது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க., எம்.பி ஆ.ராசா பேசும் போது, இந்த மாதிரி பொய் சொல்லும் முதல்வரை பார்த்ததில்லை என கூறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பொய் சொல்லும் பிரதமரை பார்த்ததில்லை” என மாற்றிக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொய் சொல்லும் முதல்வரை நான் பார்த்ததில்லை என ஆ.ராசாவின் உளறல் பேச்சு திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரை இழிவாக பேசியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தன்னுடைய கட்சி தலைவரும், முதல்வரை இப்படி பேசியதால், ஆ.ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும், தன்னை அறியாமல் உண்மையை கூறிவிட்டார். இதுதான் திராவிட மாடல் என்பது உள்ளிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.