புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் தன்னைப் பெண் என்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து தொந்தரவு கொடுத்து வருவதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இன்று காரைக்கால் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா வெளியிட்ட பதிவில் ஒரு அமைச்சர் தமக்கு டார்ச்சர் கொடுப்பதாகவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனை நாங்கள் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது நாங்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனவே எம்.எல்.ஏ சந்திர பிரியங்காவிற்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி இந்த பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

அவரது கருத்து குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சருக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவை தலைவர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்களை அழைத்து இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து அந்த வீடியோவில் எம்.எல்.ஏ சந்திர பிரியங்கா ஒரு அதிகாரி மீது கருத்து தெரிவித்துள்ளார். அது காவல்துறையாக இருக்கும் என்றும் காரைக்காலில் சமீபகாலமாக காவல்துறை ஒரு சிலரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. எனவே இதற்கு காரைக்காலில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)