• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு சிக்கல் ..

ByA.Tamilselvan

Sep 8, 2022

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011-2015 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த தொடர்பாக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. தற்போது உயர்நீதிமன்றம் முடித்து வைத்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது.