கரூரில் உள்ள உழவர் சந்தை அருகே தமிழ்நாட்டின் மண், மொழி,மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தலைமை கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சில பேர்தேர்தலுக்காக கூட்டணியை அமைத்துக் கொள்கிறார்கள். இருவரும் கூட்டணி என்ற பெயரில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயணம் இரு வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஒரு கூட்டணி வடிவு மித்து தொடர்ந்து வழிநடத்தி ஒரு சேர அழைத்துக் கொண்டு,அவர்களுக்கான உரிமைகளை முக்கியத்துவங்களை கொடுத்து தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிற நம்முடைய முதலமைச்சர் என்று பெருமிதம் தெரிவித்தார்.