மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். மாநில திமுக வர்த்தகர் அணி துணை செயலர் பி.டி.செல்வகுமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.பூலோகராஜா, இக்பால், ஆட்லின், திமுக நிர்வாகிகள் ஹெச்.நிசார், பி.ஆனந்த், எஸ்.அன்பழகன், நாஞ்சில் மைக்கேல், சின்னமுட்டம் ஷ்யாம், ரூபின், பிரைட்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






