தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர். என். ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டது, இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (08.03.25) உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதில் குறிப்பாக ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும், கால்நடை பல்கலைக்கழகம், மின்வள பல்கலைக்கழகம், டாக்டர். அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம், டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் மாநகர திமுகவினர் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, பட்டாசு வெடித்தும் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.