• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை பேச்சு

ByA.Tamilselvan

Sep 16, 2022

அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.க.வில் பி டீம் ஒன்று உள்ளது. கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருக்கும் அமைச்சர் என்னுடன் பணியாற்றிவர். அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது தி.மு.க. ஆட்சி நடத்தும் சூழ்நிலையில் உள்ளது. ஒரு கட்சியில் பயனடைந்துவிட்டு அதே கட்சியை பலி வாங்க துடித்து கொண்டு இருக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு பக்கத்து மாநிலத்தை பாரு என்று கூறி கொண்டு இருக்கிறார்.
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அ.தி.மு.க. முதுகு எலும்பு இல்லாத கட்சி என்று தி.மு.க.வினர் பேசினார்கள். தி.மு.க.வில் கோ பேக் மோடி என்றவர்கள் தற்போது கம் பேக் மோடி என்கிறார்கள். தி.மு.க. பேசுவது ஒன்று, செய்வது ஒன்று. நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸ், தி.மு.க. தான் காரணம். 2010-ல் குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும்போது அவர் தான் மருத்துவ கவுன்சிலில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என ஒப்புதல் வழங்கினார். அப்போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் எல்லாம் என்ன செய்தார்கள். ஆ.ராசா 2009, 2010, 2011-ல் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார், அவர் என்ன செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.