• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அதிமுக ஆட்சிக்கு வர திமுக உதவி செய்து வருகிறது.., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா புகழாரம்!

திமுக அரசு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நிறைய உதவிகளை செய்கிறது. குறிப்பாக சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மளிகை பொருள் உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு இதன் மூலம் மக்கள் மாறுதல் தேடி திமுக அரசை தூக்கி ஏறிய தயாராகி விட்டனர் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா புகழாரமாக பேசினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் ஒன்றியம், திருப்பரங்குன்றம் பகுதி கிழக்கு, மேற்கு மற்றும் அவனியாபுரம் பகுதி கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளின் சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி எடப்பாடியார் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கான ஆயத்த பணி கூட்டம் எம்.ஆர்.சி.மஹாலில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பகுதி கழகச் செயலாளரும், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வைத்தார்.

இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கி, மாநாட்டிற்கு  பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தாம்பூலப் பைகளை வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். 

இந்த கூட்டத்தில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, பொன்.ராஜேந்திரன், கார்சேரி கணேசன், வாசு, பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன், குலோத்துங்கன், பகுதி கழகச் செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், பன்னீர்செல்வம், அவனியாபுரம் முருகேசன், அவனியாபுரம் சரவணன், வக்கீல் கோபி, ஜீவானந்தம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, மாவட்ட வழக்கறிஞர் பிரிச்செயலாளர் சேதுராமன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நாகமலை புதுக்கோட்டை ஜெயக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட கழக துணைசெயலாளர் ஓம்.கே .சந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் சரவணகுமார், மேலூர் அருண், ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன், சேனாபதி, தினேஷ்குமார், தனக்கன்குளம் மாயி மற்றும் 2500 மேற்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், எம்.எல்.ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது..,

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, வீர வரலாற்றின் பொன்விழா எழுர்ச்சி மாநாடு நடைபெறுகிறது .இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், தலா பத்தாயிரம் பேர் மாநாட்டிற்கு வருவதாக கூறப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் 1962 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா காலத்தில் முதல் முதலில் மாநாடு நடைபெற்றது, தற்போது எடப்பாடியார் தலைமையில் மீண்டும் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திருப்பரங்குன்றம் தொகுதியின் சார்பில் ஒரு லட்சம் பேர்கள் அலைக்கடலென திரண்டு எடப்பாடியாருக்கு புகழ் சேர்க்க வேண்டும். இன்றைக்கு மதுரை என்றாலே புரட்சித்தலைவர் இருப்பிடமாக உள்ளது.

திமுக அரசு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய நிறைய உதவிகளை செய்கிறது குறிப்பாக சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மளிகை பொருள் உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு இதன் மூலம் மக்கள் மாறுதல் தேடி திமுகஅரசை தூக்கி ஏறிய தயாராகி விட்டனர்.

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு

உரிமைத்தொகை வழங்கப்படும் அதனைத் தொடர்ந்து முதியோர், ஆதரவற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அனைத்து நாளிதழ் தலைப்பு செய்தியாக உள்ளது .இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.

விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், உழவர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்டவர்கள் தங்களுக்கும் கூடுதலாக மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என நம்பி இருந்தனர் .ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உதவி தொகையில் கூடுதலாக 200 ரூபாய் உயர்த்தி விட்டு,  800  ரூபாய் வழங்காமல் மோசடி செய்து விட்டது .இது மிகப்பெரிய மக்களுக்கு செய்த துரோகம் ஆகும் .ஏற்கனவே 32  லட்சம் மக்களுக்கு இந்த திட்டம் வழங்கப்பட்டு வருகிறது இதில் 32 லட்சம் மக்களை ஏமாற்றி உள்ளனர். இந்த உலக மகா மோசடியை ஸ்டாலின் அரசு செய்துள்ளது.

எடப்பாடியார்  தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 30,000 குடும்பங்களுக்கு, வெற்றிலை,பாக்கு, பழங்கள் ,மாநாடு காண அழைப்பிதழ்களை கொண்ட தாம்பூல பைகளாக வழங்கி, மாநாட்டில் பங்கேற்க  ஏற்பாடு வருகிறது.

 திருப்பரங்குன்றம் தொகுதியில்  ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு மாநாட்டிற்கு தாம்பூலம் பை கொடுத்து வாக்கு சாவடி முகவர்கள் கொடுத்து அழைத்து வர வேண்டும். இதன் மூலம் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர்கள் பங்கேற்பார்கள் .அதை பூத் கமிட்டி நிர்வாகிகள் உங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டில் பதிவேடு செய்ய வேண்டும்.

இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் 20 லட்சம் பேர்கள் பங்கிற்கு உள்ளனர். இந்த மாநாடு வரலாற்றில் பேசும் படியாக இருக்கும். டெல்லியில் கூட்டணி கட்சிகளில் மிகப்பெரிய வெற்றியை எடப்பாடியார் பெற்றுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்றாலும் எடப்பாடியார் தலைமையான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதற்கு இந்த மாநாடு முன்னோட்டமாக அமையும் எனக் கூறினார்.