போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்.
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் 12.3.2024 -ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலையிலிருந்து பழைய நகராட்சி அலுவலகம் வரையில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட அதிமுக செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
நகரச்செயலர் என்.எம்.ராஜா,முன்னாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தேவராஜ், நிர்வாகிகள் கருணாகரன், இளங்கோவன், செல்வமணி, கோட்டையன், சேவியர்தாஸ், Ak.பிரபு பாசறை துணைத் தலைவர்.சிவாஜி, பழனிசாமி, மாசானம், சிரீதர், குழந்தை உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.