• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக திமுக நிர்வாகி மோசடி

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித் தருவதாக சொல்லி தொழிலதிபரிடம் இருந்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை ஆட்டையை போட நினைத்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொதுமக்களே விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் சங்கர். 44 வயதான இவர் திருவிக நகர் திமுக பகுதி பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த குமார் என்கிற தொழிலதிபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. குமார் தன்னிடமிருந்த கணக்கில் காட்டாத 5 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் மாற்றித் தர வேண்டும் என்று கேட்க, தானே அதை மாற்றித் தருவதாக சொல்லி இருக்கிறார்.

முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக சொல்லி இருக்கிறார் குமார். இதற்காக திருப்பூரிலிருந்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருக்கிறார். சென்னையில் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தை மாற்றுவதற்காக அண்ணாநகர் 3வது காலணியில் மற்றும் நீயும் ஆவடி சந்திப்பிற்கு வந்த சங்கர், குமார் இருவரும் நேற்று காத்திருந்திருக்கிறார்கள்.

அப்போது திட்டமிட்டு சங்கர் அனுப்பிய 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று வந்து குமாரிடம் இருந்த பணத்தை பறித்து இருக்கிறது. குமார் கும்பலுடன் வந்திருக்கிறார் அங்கிருந்த மக்களை விரட்டி பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து இருக்கிறார்கள் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முதலில் ஒரு கோடி ரூபாயை அபகரித்து விட்டு பின்னர் மீதமிருக்கும் கருப்புப்பணம் 4 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார் சங்கர் என்பது தெரியவந்திருக்கிறது.