• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை..!

Byவிஷா

Jan 25, 2024

கோவையைச் சேர்ந்த திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனையடுத்து கடந்த ஒரு வருட காலமாக கட்சி பணியில் தீவிர ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், வீட்டில் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்துள்ளனர். இதனால் கட்சி வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குடும்பப் பிரச்சினை காரணமாக காளப்பட்டியில் அவரது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியஸ் எஸ்டேட் அதிபரான கிருஷ்ணன் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.