கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

மலையில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இந்த இடம் இந்துக்களுக்கான இடம் என்பதை நீதிமன்றம் உறுதி செய்து மலை மேல் தீபம் ஏற்ற சொல்லி இருக்கிறது எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை இருந்து வருகிறது. நான் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவேன். ஆனால் எதிர்பாராத விதமாக இன்று மழை மேல் தீபம் ஏற்ற உத்தரவு வந்துள்ளது பெரிய வந்தது மிகவும் மகிழ்ச்சி.
திமுக இன்று ஆளலாம் ஆனால் இந்துஸ்தான் என்றைக்கும் இருக்கும்.
மலை விவகாரத்தில் திமுக அரசியல் செயல்பாடு குறித்த கேள்விக்கு:

திமுக தர்மத்தை நம்புவதில்லை. ஆனால் இந்துஸ்தான் தர்மத்தை நம்புகிறது. இது பாகிஸ்தான் இல்ல. திமுக இன்னைக்கு இருக்கும், நாளைக்கு இல்லாமலும் போகலாம். ஆனா தர்மம் ஜெயிக்கணும். அவங்க இப்போ நல்லா இருக்கலாம். ஆனா வருங்காலத்துல ஜெயிக்க மாட்டாங்க. தர்மம் மட்டும்தான் எப்பவும் ஜெயிக்கும். அவர்கள் தமிழ்நாட்டிலும் வாழாமல் போகலாம். அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ஆனால் சத்தியம் தான் வெல்லும் அதுதான் இன்று நடந்துள்ளது. இது இந்துக்களின் இடம் அவர்கள் இன்று என்ன வேண்டுமென்றால் செய்யலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுகவினர் இந்த பிரச்சனையை புரிந்து கொண்டு நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும்.
தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு:

தேர்தல் பல விஷயங்களை சார்ந்து இருப்பது. பல்வேறு மக்கள் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். அதையெல்லாம் விவரிக்க நான் விரும்பவில்லை. ஆனால் மக்கள் வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளார்கள். தினமும் அவர்கள் எரிக்கப்படுகிறார்கள். ஹிந்துக்கள் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யப் போவதில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் அவர்கள் வங்கதேசத்தில் காயப்படுத்தப்படுகிறார்கள். இந்து தர்மத்திற்கு அனைத்து இந்துக்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.




