காரைக்கால் அடுத்த புளியங்கொட்டை சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி, அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அங்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு பயனாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 36 குடும்பங்கள் என இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 72 குடும்பங்களில் பெரியவர்கள், குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வீடுகள் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கியது முதல் தற்போது வரை கட்டிட பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் மேற்கொள்ளாததால் அவ்வபோது மேற்கூரை பெயர்ந்து வருவது, கட்டிடங்களில் ஆங்கங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுவது தொடர் கதையாகி வருவதாகவும் கட்டிடத்தின் கான்கிரீட் உள்ளே இருக்கும் இரும்புகம்பிகள் சேதமடைந்து தற்போது வெளியே தெரிவதாகவும், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து,

திமுக விவசாய அணி அமைப்பாளரும், வடக்கு தொகுதி பொருப்பாளருமான பிரபு @பிரித்திவ்ராஜ் உள்ளிட்ட திமுகவினர் அங்கு சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனர். அதனை அடுத்து இப்பிரச்சனை குறித்து மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து மனு அளித்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை சீர் செய்து அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.