• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் உதயநிதியின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்..,

ByKalamegam Viswanathan

Aug 4, 2026

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறு பேசியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமையில் திமுகவினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மாவட்ட பிரதிநிதி ஊத்துக்குளி ராஜா முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சரவணன் விவசாய அணி சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் பால் கண்ணன் அறிவழகன்ஆகியோர் பஸ் மறியலில் ஈடுபட்டனர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர் இதில் பேரூராட்சி 2வது வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் விவசாய அணி ஊத்துக்குளி சின்னமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் பேரூராட்சி கவுன்சிலர் கொத்தாளம் செந்தில்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது கைது செய்தனர். சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் கைது கண்டித்து திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.