• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் தாமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக பெய்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அப்பகுதிக்கு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் பல்லடம் பகுதி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் நாலு முகாம் கல் அமைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களிடம் நிவாரணம் சேகரித்து வருகின்றனர் மேலும் இதுகுறித்து மாவட்டச் செயலாளர் முஜிப்போர் ரகுமான் கூறுகையில்.., அண்டை மாநிலமான கேரளா பகுதி மக்களுக்கு நிவாரணங்களை சேகரித்து வரும் ஞாயிற்றுக்கிழமை அனுப்புள்ளதாகவும், நிவாரண உதவிக்கு அனைத்து தரப்பு மக்களும் உதவி செய்து வருவதாகவும், இதுவரை 5 லட்சம் மதிப்பிலான அரிசி பருப்பு, துணிகள் மற்றும் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்களை சேகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.