• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மாநில உரிமைகளை பறித்த கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி-சீமான் குற்றச்சாட்டு..,

மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு திமுக மற்றும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக எரியோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எரியோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உசேனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது;
இந்தியாவை யார் ஆள்வது என்ற போட்டி வரும்போது இந்த கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரசோடு கூட்டணி வைத்துக் கொள்கிறது. தமிழ்நாட்டை யார் ஆள்வது என்ற போட்டி வரும் போது இதே கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்கிறது. மாநில உரிமைகளை பறித்துக்கொண்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்கிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் வரும்போது திமுக மற்றும் அதிமுக ஊழல் கட்சிகளோடு பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவை 50 ஆண்டுகள் ஆண்டது காங்கிரஸ் கட்சி அதன் பிறகு ஆண்டது பாஜக.

தமிழ்நாட்டை அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளும் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. போட்டி போட்டுக் கொண்டு ஊழல் லஞ்சத்தை பெருக்குவதிலும், இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும், மக்களின் நலங்களை கெடுப்பதிலும் இந்த இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் வாழ விட வேண்டும் என்ற துளிகூட எண்ணம் இல்லாத கட்சி தான் இவைகளாகும்.

மக்களுக்காக இந்த மண்ணில் எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விவசாயிகள் இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது.

கல்வியை கொடுப்பதை தவிர அரசுக்கு என்ன வேலை இருக்கிறது. தங்கள் குழந்தைகளை நல்ல கல்வி கொடுத்து அரசு பணிக்கு சென்று முன்னேற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றார்கள்.

மறைந்த பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் இப்படித்தான் கடன் வாங்கி கல்வியை கற்றுக் கொண்டிருந்தனரா மாணவர்கள் கடன் தள்ளுபடி என்ற செய்தி அன்று வந்ததா ஏன் மாணவர் கடன் வாங்கி படிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்விக்காக கடன் கொடுத்து அதை தள்ளுபடி செய்து செய்கிறது. ஏன் இந்த அரசு மாணவர்களுக்கு கல்வியாக இலவசமாக வழங்கக் கூடாதா

தமிழகத்தில் கழுத்தில் காதில் அணிந்துள்ள நகைகளை அடகு வைத்தும் மற்றும் வீட்டு உள்ள பொருட்களை விற்று தங்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக பணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம் மற்றும் தண்ணீர் இங்கு வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்காமல் தனியாரிடம் விலைக்கு வாங்கி வழங்கி வருகிறது. மின்சாரத்தை அரசே ஏன் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கவில்லை.

அதிமுக மற்றும் திமுக அரசு வந்தால் அனைத்து மது கடையிலும் திறந்து கிடக்கும் மக்கள் எப்போதும் மயக்கத்தில் இருக்க வேண்டும் என்று இந்த இரு கட்சி அரசுகளும் நினைக்கிறது.

மழையை வெட்டி எடுத்தும், மணல்களை கொள்ளையடிப்பது மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நரி ஆடுகளை பட்டியலில் அடைத்து வைத்து நான் வெற்றி பெற்றால் உங்கள் அனைவருக்கும் போர்வை தருவேன் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனது. அதன் பிறகு சக நரிகளைக் கொண்டு அனைத்து ஆடுகளின் தோல்களை உரித்தது அதற்கு ஆடுகள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு உங்களுக்கு போர்வை தரப் போறேன் அதற்காக உங்கள் தோலை உரிக்கிறோம் என்றது.

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பல்வேறு வரிகளை உயர்த்தி மக்களை சிரமப்படுத்தி அதன் மூலம் இலவச பொருட்களை வழங்குகிறார்கள்.

சீமான் நன்றாக பேசுகிறார் என்று ஒரு வயதான அம்மா கூறுகிறது ஆனால் இவர் தேர்தல் வெற்றி பெறப்போவதில்லை என்கிறார்.

தமிழ்நாட்டை ஐந்து முறை திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக ஆக்கினார்கள், அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நான்கு முறை முதலமைச்சராக ஆக்கினார்கள் ஆனால் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை அதன் பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தனர். அவரும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை இந்த நிலையில் தேர்தல் வந்துள்ளது அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ரூ 500, ரூ 1000 வாங்கிக்கொண்டு மக்களாகிய நீங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்றவுடன். குடிநீர் வரவில்லை. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் இல்லை. என்று மக்கள் புலம்ப வேண்டியது.

தொழிற்சாலை கட்டுவதற்காக வீடுகள் இடிக்கிறார்கள் என்று அலற வேண்டியது. மக்கள் பாதிக்கும் போது சீமான் வர வேண்டும் ஆனால் ஓட்டு மட்டும் அவர்களுக்கு அளிப்பார்கள். என்னை சாலையில் தூக்கி எறிவார்கள்.

இந்த நாடு லஞ்சம், ஊழலில் அதிகளவு பெருத்து விட்டது. கடல் மட்டுமே உள்ள ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் வளர்ந்து விட்டது. கல்வியில் மூன்றாவது இடத்தில் உள்ளது ஆனால் வேலைவாய்ப்பில் இளைஞர்களுக்கு அதிக அளவு கொடுக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கே வேலை வாய்ப்பு பெற்று சிறப்பாக இருக்கின்றனர் ஒரு சின்ன நாடு எவ்வளவு பெரிய முன்னேற்றம். அதற்கு காரணம் அங்கே லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகம் நடக்கிறது.

ஆனால் அனைத்து வளமும் உள்ள தமிழ்நாட்டில் பசி இருக்கிறது வறுமை இருக்கிறது பட்டினி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் ஊழலை ஒழிப்பேன். பசி பட்டினி வறுமை இல்லாத மாநிலமாக மாற்றுவேன். நாங்களே மக்களுக்காக விவசாயம் செய்வோம். ஆடு மாடு வளர்ப்பது, தச்சு வேலை பார்ப்பது, நெசவுத் தொழில் செய்வது, படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அரசு பணி வழங்குவேன்.

சுற்றுப்புற கிராம பகுதிகளில் கரும்பை பயிரிட்டு அங்கே ஒரு தொழிற்சாலை அமைத்து படித்தவர்கள் படிக்காதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அங்கேயே அரசு பனி கொடுத்து பணிக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக சைக்கிள் வழங்குவேன். அந்த தொழிற்சாலையில் சர்க்கரை, கல்கண்டு, எத்தனை நாள் பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு பொருட்களை தயார் செய்தேன்.

விவசாயமே செய்ய முடியாத காட்டுப் பகுதியில் ஆடு மற்றும் மாட்டுப் பண்ணை தொழிற்சாலை அமைத்து மாடுகள் இருந்து பால் எடுத்து விற்பனை செய்வேன்.

தற்போது தமிழ்நாட்டுக்கு ஆந்திராவில் இருந்து அங்குள்ள முதலாளிகளால் கலப்பட பால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை தவிர்க்க தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணை அமைத்து தமிழக மக்களின் கலப்படமில்லாத தூய பால் தேவைகளை நிறைவேற்றி அரசுக்கு வருவாய் ஈட்டுவேன்.

மதுவால் தமிழக அரசுக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் அதைப் பற்றி கவலைப்படாமல் மதுக்கடைகளை மூடுவேன் இயற்கையான முறையில் தொழிற்சாலைகள் அமைத்து அரசுக்கு பலவகையில் வருமானங்கள் தேடிக் கொடுப்பேன்.

சீமான் இவ்வளவு துணிவோடு பேசுகிறேன் என்றால் என்னிடம் நேர்மை துணிவு இருக்கிறது.
நான் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்கு இலவசம் எதுவும் கொடுக்க மாட்டேன் திமுக, அதிமுக உள்ளிட்டமற்ற கட்சிகளை இதுபோல கூற முடியுமா? அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை கொடுப்பேன். மக்களுக்கு நல்ல மருத்துவத்தை கொடுப்பேன்.

அரசின் இலவசங்களை ஒழிப்பேன். 10 அரை லட்சம் கோடி கடனை வாங்கி அரசுகள் இலவசங்கள் வழங்கி உள்ளது.
எப்படியாவது தலை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் துடிக்கிறோம். ஆனால் அதற்கு நான் ஒருவனால் முடியாது அதனால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் மாற்ற முடியும்.

விவசாயி இல்லை என்றால் நாட்டிற்கு உணவு கிடைக்குமா?

சாதி பார்க்காமல் சாதிக்க துடிக்கின்ற நல்ல மனதான வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசேனுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.