பேருந்துகளை வழிமறித்து நீர் மோர் வழங்கியதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை தரமணி பாரதிநகர் பஸ் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி மேற்கு பகுதி 178 வது கழகம் சார்பில் வட்டச் செயலாளர் ஆர்.கே.கார்த்திக் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.
மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி உள்ளே சென்று ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் நீர் மோர் வழங்கியதால் சாலையில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்பராஜ் ஜெயபிரகாஷ் காண்டியப்பன் மற்றும் வட்ட தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.