• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Byவிஷா

Oct 21, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை புறநகரில் இருந்து 11176 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.., அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 11,176 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்களில் சென்னையில் இருந்து 4,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் பஸ்கள் இயக்கப்படும். கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 3 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது. தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.