சிவகங்கை சாம்பவிகா பள்ளி குழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலைச் செல்வங்களுடன் மத்தாப்புகள் ஏந்தியும், தீபங்கள் ஏற்றியும், பூக்களால் கோலமிட்டும் தித்திக்கும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.


மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் பள்ளி செயலர் AM சேகர் கலந்து கொண்டு தீபாவளி திருநாள் சிறப்புகளை பற்றியும் மாணவர்கள் பாதுகாப்பாக தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், சரவணன் பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர் ,மகரஜோதி, சக்திவேல், சுரேஷ்குமார், சுதி சந்திரன், ஜெயமணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்து பஞ்சவர்ணம் பொறுப்பாசிரியர் பாண்டி செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.







