• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு – சிறார்கள் ஓட்டி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை – வாகனங்களின் பதிவு ரத்து செய்ய பரிந்துரை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் I.P.S., உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் I.P.S., மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர், கன்னியாகுமரி செல்லும் சாலை வழியான ஆனைப்பாலம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது சிறார்கள் ஓட்டி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதல் மொத்தம் 10 சிறார்களின் பெற்றோர்கள் மீது இளைஞர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக “JUVENILE DRIVING CASE” under section 199A Motor Vehicle Act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனம் JM II நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் கோப்புக்கு எடுக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் பெற்றோர்களுக்கு கீழ்க்காணும் தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

(1) ரூ 25000 அபராதம்
(2) மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை
(3) ஒரு வருடம் வாகன பதிவு ரத்து. வாகனங்கள் வழங்கப்படாது.
(4) சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை.

ஆகவே, பள்ளி விடுமுறை காலங்கள் வர உள்ள நிலையில், சிறார்கள் வாகனங்கள் இயக்காதவாறு பெற்றோர்கள் கவனமாக செயல்படுமாறு நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.