தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப் போட்டியை மாட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த கோலம் போட்டியில் குழுவாகவும், தனிநபராகவும் பெண்கள் கலந்து கொண்டு கோலமிட்டு பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்களது திறமைகளை காண்பித்தனர். இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மாவட்ட செயலாளர் இளம்பை இரா தமிழ்ச்செல்வன், அதிமுக சின்னமான இரட்டை இலை ஆகிய உருவத்தினை வரைந்து காட்டி அசத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் கோலங்களை பார்வையிட்டு போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு கிரைண்டர், மிக்சி, குக்கர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசாக குத்துவிளக்கு வழங்கப்பட்டது.





