மதுரை கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றியம் கள்ளந்திரி முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார்.முகாம் செயலாளர் சிறுத்தை சாமி முன்னிலை வகித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கபடி போட்டியில் மதுரை மேலூர் நத்தம் சிவகங்கை வட்டாரத்தில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
வெற்றி பெற்ற கபடி வீரர்களுக்கு 1, 2, 3, 4 பரிசுகள் முறையே ரூ20000 15,000 12,000 பத்தாயிரம் மற்றும் ஆறுதல் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)