நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தியாகி டிகே செல்லத்துரை நினைவு சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் உதவி குரு பொன்செல்வின் அசோக்குமார் ஜெபித்து போட்டிகளை துவக்கி வைத்தார். நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் குணசீலராஜ் முன்னிலை வகித்தார்.போட்டிகளில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலிருந்து 251 சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், பொது பிரிவினர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. 9 வயது, 11 வயது, 13 வயது 17 வயது ஆகிய பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியின் தலைமை நடுவராக காமராஜ் கல்லூரி பேராசிரியை முனைவர் கற்பகவல்லி பணியாற்றினார். நாசரேத் டிகேசி சதுரங்க பயிற்சி கழக நிறுவனர் விஜயகுமார், மற்றும் சதுரங்க பயிற்சியாளர் இவாஞ்சலின் புஷ்பா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.சங்கர் துணை நடுவராக பணியாற்றினார். உதவி நடுவர்களாக சிகப்பி, மாரியப்பன், முத்தையா, முத்துலட்சுமி, நவீன், ஆகாஷ், அருள், பால ஆகாஷ் மற்றும் பரத் ஆகியோர் பணியாற்றினர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் நந்தகுமார் கலந்து கொண்டார். மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நாசரேத் ஒய் எம் சி ஏ செயலாளர் சாமுவேல்ராஜ் அனைவரையும் வரவேற்றார். லேவி அசோக் சுந்தரராஜ் சிறப்புரை ஆற்றினார். திருமறையூர் சேகரகுரு ஜான்சாமுவேல் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள், பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்து பிரிவு வெற்றியாளர்களுக்கும் ரொக்க பரிசுகளை நன்கொடையாக கிரேஸ் சூப்பர் வேர்ல்ட் நிறுவனத்தினர் வழங்கினார்கள். மதுரை சபையர் குழுமத்தின் இயக்குனர் டி கே சி ரஜீவ்குமார், நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், நாசரேத் மெர்கண்டைல் வங்கி கிளை மேலாளர் பாண்டி குமார், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜஸ்டின், நளினி ஜீவராஜ், அரிமா புஷ்பராஜ், ஜட்சன், புஷ்பம் செந்தில்குமார், சாம்சன் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எபனேசர், ஆம்ஸ்ட்ராங், ஸ்ட்றப்பின்ஸ் லூயிஸ், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாசரேத் ஒ எம் சி ஏ உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
