இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி கவுண்டம்பாளையத்தில் துவங்கப்பட்டது. ரத்த தானம் கொடுப்பவருக்கும். தானம் பெறுபவருக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாகவும், பராமரித்தல் மற்றும் குணப்படுத்துதலோடு. அவசர கதியில் ரத்தம் தேவைப்படுவோர்க்கு உதவுவதை நோக்கமாக கொண்டும் துவங்கப்பட்ட இந்த மையத்தின் துவக்க விழாவில்,மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி,ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர். 24 மணி நேரமும் செயல்பட உள்ள இந்த ரத்த வங்கி மருத்துவமனைகள், தனி நபர்களுக்கு சேவையை வழங்க உள்ளதாகவும்,
ரத்த தானம் செய்வோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவசர நேரத்தில் அவர்களிடம் முறையாக அறிவித்து ரத்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கோவை கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், கணேஷ் குமார், அன்னபூர்ணா ராமசாமி, பாலசுப்ரமணியன், ரூட்ஸ் ராமசாமி, சாய் கிருஷ்ணன், விஜயலட்சுமி, சரஸ்வதி நடராஜன், ராஜ பாஸ்கர கனகேஸ்வரன், நிர்மலா ராஜசபாபதி, ஸ்ரீனிவாசன், ரமேஷ், பாலசந்தர், சீதாராமன், சௌந்தர்ராஜன், ராம்மூர்த்தி, மோகன்சங்கர், பாலகிருஷ்ணன், லட்சுமி நாராயணசாமி, குருபாரதி உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.