• Mon. May 20th, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பாம்பு – அச்சத்தில் அரசு ஊழியர்கள்.

BySeenu

Dec 9, 2023

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும்,பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.இதனிடையே வளாகத்தின் உள்ளே குப்பைகளும் புதர்களும் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. அதே போல அங்குள்ள புதர்களில் அடிக்கடி பாம்புகள் தென்படுகிறது.

ஏற்கனவே பலமுறை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் பாம்புகளை தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறையினர் பிடித்து சென்றுள்ளனர்.

இதனிடைய மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்புகள் சுற்றி திரிந்துள்ளது.இதனை கண்ட அரசு ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சுற்றித்திரிந்த சாரைப்பாம்பை லாபகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதர்களையும் குப்பை மேடுகளையும் அகற்றினால் மட்டுமே பாம்புகள் இங்கு தங்குவதை தடுக்க முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *