• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ByKalamegam Viswanathan

Feb 26, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எதிர்கோட்டை பகுதியில் உள்ள ரேசன் கடையில், பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பு வகைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஆலங்குளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துணவை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், குண்டாயிருப்பு பகுதியில் கனிம வள நிதி திட்டத்தின் கீழ், சுமார் 13 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், திருநங்கைகளுக்கான தொகுப்பு வீடுகள் கட்டும் பணிகளையும் ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது செயற்பொறியளார் கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.