• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அப்துல் கலாம் கல்வி செயற்கைகோள் குறித்து கலந்துரையாடல்

ByKalamegam Viswanathan

Feb 16, 2023

மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கலாம் கல்வி செற்கை கோள் குறித்த விரிவான கலந்துரையாடல்
கடந்த 14.02.23 செவ்வாய்கிழமைஅன்று மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மக்கள் ஜனாதிபதி டாக்டர் . அப்துல் கலாம் கனவுகளை இலட்சிங்களை நினைவாக்கிட IWSF தலைவர் டாக்டர் விஜயராகவன் முயற்சியில் விஞ்ஞானி டாக்டர் பொன்ராஜ் தேர்ந்தெடுத்த 50 இளம் இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பில்.,50 கோடி உலக ஏழை மாணவர்கள் பயன்படும் வகையில் இந்தியாவில் தயாராகும் அப்துல் கலாம் கல்வி செற்கை கோள் குறித்த விரிவான தகவல்களை அதன் செயல்பாடுகளை பயன்களை மாணவர்களிடம் எளிமையாக புரியும்படி விளக்கி பேசினார்கள்..

மாணவர்களின் பல்வேறு விண்வெளி சந்தேக கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார்கள்.அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தினை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நிகழ்ச்சிகள் குறித்தும் கலாம் அவர்களின் தொலைநோக்கு திட்டங்கள் , லட்சியங்கள் , கனவுகள் குறித்தும் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்., மேலும் இந்த அருமையான நிகழ்சியை International We Serve Foundation னின் இந்திய ஒருங்கிணைப்பாளர் பாலு ., மதுரை ரோட்டரி கிளப் ஆப் ஜெம்ஸ் தலைவர் விஜிஸ் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.