திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் வேடசந்தூர் தொட்டனம் பட்டியை சேர்ந்தவர் சந்தியா, 41. மாற்றுத்திறனாளி. இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். என் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ஆண்டிவேல் என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் குடும்ப நடத்தியது மட்டுமில்லாமல், எனக்கு உரிய தொகை ரூ.25 லட்சத்தை என்னிடம் வாங்கி மோசடி செய்துள்ளார். மேலும் என்னை குடித்து விட்டு வந்து அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். என்றார்.




