• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி…

ByKalamegam Viswanathan

Sep 25, 2023

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கே.ராஜதானி கோட்டை, சேர்ந்த துரைப்பாண்டி மாற்றுத்திறனாளி. இவரது விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் மறித்து உரிமை இல்லை என்று பிரச்சினை செய்து வருகின்றனர். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்று கூறி ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்தனர். இதை அடுத்து ஆட்சியிடம் மனு அளித்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ் பாபு என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.