சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் மாற்றுத்திறனாளிகளை இலவச பேட்டரி வாகன மூலம் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை அரசு பேருந்துகள் மற்றும் காவலர் வாகனங்களில் ஏற்றுக் கொண்டு முடிச்சூர் பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக விழுப்புரம் பழனி நத்தம் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2 மேற்பட்டவர்கள் தற்போது சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ஆந்திராவை போல மாற்றுத்திறனாளிகளுடைய ஊதியத்தின் தீவிரத்தைப் அதிகப்படுத்த வேண்டும் என்றும்,, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகை, 6000 ரூபாய், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என, உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்,ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் 100 நாட்கள் வேலை ஆறு மாதத்திற்கு மேலாக வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் வயது வரம்பை நீக்கி, விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வாயிலாக மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும்,நுாறு நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை அட்டை வழங்குவதுடன், பணியும் வழங்க வேண்டும் என்ன தெரிவித்துள்ளனர்.








