• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..,

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 புதனன்று கொண்டாடப்படும் நிலையில், உரிமைச்சட்டம் 2016 அமல்படுத்த நிதி ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கண்ணில் கருப்புத்துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் 
ஈடுபட்டனர்.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் பி.விமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.வில்சன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், ஆர்.லிட்டில்பிளவர், இணை செயலாளரும் மாநகராட்சி நியமன உறுப்பினருமான எம்.அருள் உள்ளிட்டோர் பேசினர்.
அனைத்து இடங்களிலும் தடையற்ற சூழல் ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆந்திராவைப்போல் ரூ.6000ஈ 10000, 15000 என உயர்த்த வேண்டும், ஒன்றிய அரசின் பங்காக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
மாநகர நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற எம்.அருள், புத்தளம் பேரூராட்சியில் நியமனம் பெற்ற சாந்தி குணசேகர் ஆகியோருக்கு ஆர்ப்பாட்டத்தின்போது சங்கத்தின் மாநகரக்குழு சார்பில் செயலாளர் அருள் குமரேசன் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.