• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் “2K லவ்ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

Byஜெ.துரை

Aug 26, 2024

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, “2K லவ்ஸ்டோரி ‘ படத்தின் முழுப்படப்பிடிப்பும்
38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர்.

படக்குழுவினர் தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இது என்பது குறிப்பிடதக்கது.