விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ரூ.மூன்று கோடியில் புதிய ஆய்வகம் தாளாளர் சோலைசாமி திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே கணினி சிப்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசின் கீழ் செயல்படும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சி-டாக் பெங்களூர் நிறுவனத்தின் மூலம் கல்லூரி மாணவர்களின் செமிகண்டக்டர் துறையில் திறன்களை மேம்படுத்த சிப்-டூ ஸ்டார்ட்அப் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.

இதற்காக தமிழக அளவில் 47 சிறந்த பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

தென் தமிழகத்தில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் மூலம் ரூ.மூன்று கோடி மதிப்பிலான ஆய்வகம் மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ளது
இந்த ஆய்வகத்தில் சினாப்சிஸ், கேடன்ஸ், ஆன்சிஸ், கீசைட், சில்வாகோ, சீமென்ஸ் போன்ற மென்பொருள்கள் உள்ளன.
இந்த ஆய்வகத்தின் மூலம் சிப் வடிவமைப்பு மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் நுட்பம் தொடங்கு வதற்கு மாணவர்களுக்குஉதவியாக இருக்கும்.
இந்த ஆய்வகத்தை பி. எஸ்.ஆர். கல்விக் குழு மத்தின் தாளாளர் சோலை சாமி திறந்து வைத்தார். கல்லூரி இயக்குநர்கள் அருண்குமார் மற்றும் விக்னேஷ்வரி, டீன் மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லூரி நிகழ்ச்சி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, மின்னணுவியல் துறை தலைவர் வினோத், மோகன், மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.




