
புது முக இயக்குனர் மாதவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, ஜானகி மற்றும் அருண் உள்ளிட்ட நடிகர்கள்
நடித்து வெளிவந்த திரைப்படம் டைனோசர்ஸ்.
கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய் கார்த்திக் இருவரும் மகன்களாக வருகின்றனர். ரிஷியின் உயிர் நண்பன் மாறா பிரபல ரெளடியான மானேக்ஷாவிடம் அடியாளாக இருந்து வந்தார் இந்நிலையில் தனக்கு திருமணம் ஆனதும் மானேக்ஷாவிடம் இருந்து வெளியே வர முடிவு செய்கிறார்.
ரெளடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது ஆட்களை சரண்டர் ஆக சொல்கிறார் மானேக்ஷா. தனது நண்பனுக்காக அந்த கொலை பழியை வாங்கிக் கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறார் அட்டு ரிஷி.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் அருண் ஒரு ரெளடி. இவரிடம் சிக்கி படுகொலை செய்யப்படுகிறார் மாறா. இவரின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு காரணமாகி விடுகிறார்.
கடைசியாக மாறாவின் கொலைக்கு பழி தீர்க்கப்பட்டதா.? இல்லையா? உதய் கார்த்திக் எப்படி இவர்களின் வலையில் சிக்காமல் தன்னை காப்பாற்றி கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
நாயகன் உதய் கார்த்திக் மிக சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார். சாய் பிரியா, தேவா இருவருக்குமான காதல் காட்சிகள் சிறப்பு. முதல் பாதி முழுவதையும் மாறா அசத்தியுள்ளார். அவர் கொலை செய்யப்படும் முன்பு பேசும் வீர வசனங்கள் படத்திற்கு பலம்.
உடம்பு முழுவதும் வெட்டுப்பட்டு எழுந்து நின்று ஒரு ஆட்டம் போடுவார். அது எப்படி என்று தான் யூகிக்க முடியவில்லை மனைவிக்காக ஏங்கியது வாழ்க்கையை பார்த்து பயந்தது என கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கேற்ப சிறப்பாக செய்துள்ளார் அட்டு ரிஷி.
முதல் காட்சியிலேயே தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலை பிடித்து பேசும் வசனம் அருமை நட்பிற்காக செய்யும் செயல் தரம். அம்மாவாக நடித்த ஜானகி வீரநாச்சியராக வாழ்ந்துள்ளார். தனது மகனின் வீரத்தை பேசும் போது தனது நடிப்பில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
போபோ சசியின் இசை மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். தனித்துவமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருந்தார். இசையமைப்பாளர் போபோ சசி மொத்தத்தில் டைனோசர் வேகத்தை இன்னும் அதிக படுத்தியிருக்கலாம்.