• Mon. Oct 2nd, 2023

தமிழக முதல்வர் தலையிட்ட வழக்கில் திண்டுக்கல் எஸ்.பி. உறுதி காட்டியிருக்க வேண்டும்.

ByIlaMurugesan

Dec 11, 2021

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாகவும் குற்றவாளிக்கு எதிராகவும் வழக்கு பதிவதில் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் உறுதிகாட்டியிருக்க வேண்டும் என்று முன்னாள் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.


கே.பாலபாரதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மீதான தாளாளர ஜோதிமுருகன் நடத்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறத்தி சனியன்று மணிக்கூண்டு முன்பாக சிபிஎம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.பாலபாரதி கூறும்போது
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய . உயர்நீதிமன்றத்தில் தம்pழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்துவது தேவை என்று கருதுகிறோம். ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதம் கூட ஆகவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் இத்தனை சிறுமிகள் பலாத்காரம் படுகொலை என்று சாதாரண மக்களை நம்ப வைப்பதற்கும் பேச வைப்பதற்குமான ஒரு அரசியல் நடைபெறுகிறது. இந்த அரசியலில் தமிழ்நாடு அரசு அழுத்தமாக கவனம் செலுத்தி இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டால் தான் இந்த வழக்கில் பிணை வழங்க யாரெல்லாம் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்களின் நெட்ஒர்க் என்று விசாரணை அறிக்கை மூலம் அரசின் கவனத்திற்கு வரும்.

ஜோதிமுருகன் ஒரு முக்கிய பிரமுகராக உள்ளார். அவரது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரமுகர்கள்ää திண்டுக்கல் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். ஜாமீன் வழங்கிய நமது மகிளா மன்ற நீதிபதி போக்சோ குற்றவாளி ஜோதிமுருகன் பற்றி சொல்லும் போது பல விருதுகளை பெற்றிருக்கிறார். பல கல்லூரிகளை நடத்துகிறார். இதுவரை அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்கிறார். சமூகமும் மக்களும் ஒருவரின் கடந்த கால வரலாறுகளை விருதுகளையும் பார்த்து தான் நல்லவர் கெட்டவர் என்று முடிவு செய்கிறார்களா? அந்த கல்லுர்ரியின் மாணவிகள் 2 தினங்களாக போராடினார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் போராடுகிற மாணவியுடன் பேசியதில்லை. ஆனால் சுரபி நர்சிங் கல்லூரி மாணவிகள் போராடும் போது பாதிக்கப்பட்ட மாணவியிடம் அலைபேசியில் பேசுகிறார். உறுதியான நடவடிக்கை எடுப்போம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் சொல்கிறார். முதல்வர் பேசியது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்ட காவல்த்துறை அதிகாரிகளுக்கு நினைவிருக்கிறதா? அதில் கவனம் இருந்தால் நீங்கள் எத்தனை பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டிருப்பீர்கள்?. உடனடியாக கல்லூரி மாணவியை அரசாங்க மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கூட்டிச்செல்கிறார்கள். போக்சோ சட்டத்தில் எங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது. 3 வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளானால் பெற்றொர்கள் புகார் கொடுத்தவுடன் அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து சோதனை செய்யவா போக்சோ சொல்லியிருக்கிறதா?

திண்டுக்கல் மாவட்ட காவல்த்துறைக் கண்காணிப்பாளர் கொஞ்சம் போக்சோ சட்டத்தை படிக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் சிறுமிகள், பெண்கள் மீதான வன்கொடுமைகளை விசாரிக்க எதற்கு ஒரு அதிகாரியை ஒதுக்கியிருக்கிறீர்கள்? மாணவிகளோடு, பெண் குழந்தைகளோடு இது தொடர்பாக பெண் அதிகாரி தானே பேச முடியும். இதெல்லாம் நடக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்பதை கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் வழக்கில் உறுதித்தன்மை காட்டாமல் யார் நழுவ விட்டார்கள்.? காவல்த்துறையினர் கடுமையான பிரிவுகளில் வழக்கு போட வேண்டியது தானே. அது பொய்யா? உண்மையா என்பதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும். போலீசார் மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்திருக்க வேண்டாமா? முதல்வர் தலையிட்ட பிரச்சனையில் காவல்த்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் வித்தியாசம் உள்ளது என்று கேள்வி எழுப்புகிறோம். முதலமைச்சர் தலையிட்ட பிரச்சனையில் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும் என்று மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் ஏன் சிந்திக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஜோதிமுருகன் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் ஜாமீனில் வெளிவருகிறார். அன்றைய தினம் இந்திய மாணவர சங்கத்தின் மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா வருகிறார். இந்த வழக்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் எப்படி பெயில் கொடுத்தார்கள்.

அதுவும் போக்சோ குற்றவாளிக்கு எப்படி கொடுக்கப்பட்டது என்று எங்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் எங்களிடம் கேள்வி எழுப்பிய பிறகு தான் இது ஒரு சாதாரண பிரச்சனை இல்லை என்று அடுத்த நாள் நீதிமன்றம் முன்பாக போராடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. நீதிமன்றம் என்பது மக்கள் நீதிமன்றம் தானே. பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து நீதிமன்றம் முன்பாக முறையிடுவதற்கு எந்த ஜனநாயக உரிமையும் கிடையாதா? என்று பாலபாரதி கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *