• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்

ByKalamegam Viswanathan

Mar 27, 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி அறிவிப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்பு 06.04.2023. வியாழக்கிழமை அன்று ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ,மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் மற்றும் தர்மபுரி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு நெடுநாளாக வெளியிடப்படாமல் கிடப்பில் உள்ள பணி விதிகள் அரசாணை உடனே வெளியிட கோருதல், ஊராட்சி செயலரின் மாத ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்குதல், தேர்வுநிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல், காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புதல், அரசு பணியாளர்களுக்குரிய ,அனைத்து சலுகைகளையும் வழங்கிட கேட்டல் மற்றும் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும், கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வளவு இயக்க நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இவர்களின் வாழ்வாதாரத்தை இன்று வரை மேம்படவே இல்லை. உயர்ந்துள்ள விலைவாசியில், இவர்கள் தற்போது பெற்று வரும் தொகுப்பு ஊதியம் மிக சொத்த தொகையாகும் எனவே ,மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 15,000 காலம் முறை ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெறும் பொழுது ஒட்டுமொத்த பணிக்கொடை ரூபாய் 2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூபாய் 5000 அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மாதம் 10000 தொகுப்பு ஊதியம் ,ஊராட்சி மூலம் நேரடியாக வாங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச கால முறை ஊதியமாக ஊராட்சியில், ரூ.15000ஐ. அரசு கருவூலத்தில் பறந்த வேண்டும் .ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக வேலை நேரம் தாண்டி பணி செய்ய நிர்பந்தத்தில் இரவு நேரங்களில் சனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள் ஆகியவற்றை ஆய்வு கூட்டங்கள் நடத்துதல் அவசரப் பணி என்று சொல்லி கால நேரம் வழங்காமல் உடனே செய்ய வேண்டும் நிர்பந்தித்து, நெருக்கடி நிலையை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு அரசாணைப்படி உடனடியாக தேர்வு நடத்தி அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.
வட்டார ,மாவட்ட சுகாதார உரிமையாளர் 18 ஆண்டுகால பனிக்காலத்தை கருத்தில் கொண்டு இடைக்காலமாக ரூபாய் 25000 மாத ஊதியம் நிர்ணயிக்கவும், இவர்களின் வயது மற்றும் குடும்ப சூழ்நிலையை கருவியும் பணி காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும். உதவி இயக்குனர் நிலையிலான பணியிடத்திற்கு தேர்ந்தோர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் முன்கல பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர் மேல்நிலைப்பொட்டி இயக்குபவர்கள் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு, தமிழக முதல்வரால், அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15.000 இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனே வழங்கிட வேண்டும். மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் கணினி உதவியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நெடுங்காலமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு அரசு பணியில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.
900க்கும் மேற்பட்ட ஓவர் சியர்கள், பிஇ, பிடெக், முடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஓவர்சியர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நான்காண்டுகள் முடிந்தவுடன் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
எனவே, தற்போது உள்ள காலியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான ஒவர்சியர்களை உதவி பொறியாளர்களாக நியமனம் செய்து, முடிக்கும் வரை புதிய அரசாணை நிறுத்தி வைத்திட வேண்டும். உதவி பொறியாளர் நிலையிலிருந்து உதவி செயற்பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு பெறாமல் ஏறத்தாழ 12 ஆண்டுகளாக உதவி பொறியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
எனவே, தற்போது காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர்கள் காலி பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி நியமனம் செய்திட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்னா போராட்டம் நடைபெற உள்ளது என, தெரிவித்துள்ளனர்.. இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் தர்னா போராட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் சேலம் முருகன், மாநில பொருளாளர் ராம்நாடு ரவி, மாநில மகளிர் அணி செயலாளர் ராம்நாடு செந்தாமரை,, மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடி வேல்முருகன், மாநில பொருளாளர் சேலம் மகேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் கடலூர் விஜயபாலன், மாநில பொருளாளர் தூத்துக்குடி சங்கர், மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணகிரி செங்கதிர் செல்வன், உட்பட சங்க நிர்வாகிகள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..