• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மாடக்குளம் பகுதியில் மாணவர்கள் விடுதி முன்பு தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டம்

ByKalamegam Viswanathan

Sep 19, 2024

மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியின் சங்கர சபாபதி என்பவரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, ஏராளமான மாணவர்கள் விடுதி முன்பு அவரது தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல்சேகரன் குருபூஜையில் கலந்து கொண்ட விடுதியின் காப்பாளர் அரசு அதிகாரிகள் ஆதி திராவிட நலத்துறை பணிசெய்ய விடமால் அமைச்சரை தடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டை செய்தியாளர்களின் முன்பு வைத்திருக்கிறார்.

இதனை அறிந்த மதுரை ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் அவரை பணி இடை நீக்கம். இதற்கான காரணமாக ‘ பொது இடத்தில் ஜாதி பற்றி பேசக்கூடிய தாங்கள் விடுதியிலும் மாணவர்களிடத்திலே ஜாதி பாகுபாடுகளை பார்ப்பீர்கள் என்கிற காரணத்தினால் பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என்று முதற்கட்ட தகவல்கள் மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாணவர்களை பொறுத்தவரையில் அவர் எங்களது காப்பாளர் எங்களை நல்முறையில் தான் வழி நடத்துவார். எந்தவித குற்றச்சாட்டும் இதுவரை நாங்கள் அவர் மீது வைக்கவில்லை. அவர் பரமக்குடியில் பேசிய ஒரு விவகாரத்திற்காக மட்டுமே அரசு இந்த முடிவை எடுத்திருப்பது வேதனையை தருகிறது. உடனடியாக எங்களது காப்பாளரை இந்த இடத்திலேயே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.