• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் -ன் ‘மாறன்’ திரைப்படம்

தியேட்டர்களில் படம் வெளிவராமல் தொடர்ச்சியாக ஓடிடியில் வருவது ஒரு முன்னணி நடிகருக்கு அவரது வளர்ச்சியில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் அப்படி ஒரு நிலை தனுஷுக்கு இப்போது வந்திருப்பது ஆச்சரியம் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. அந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து தனுஷ் இந்தியில் நடித்த ‘அட்ராங்கி ரே’ படமும் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அடுத்து அவர் தமிழில் நடித்துள்ள ‘மாறன்’ படமும் ஓடிடியில் வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இப்படி அடுத்தடுத்து ஓடிடியில் ஹாட்ரிக் அடிக்க உள்ளது தனுஷ் நடித்துள்ள படங்கள்.

இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள ‘தி கிரே மேன்’ படம் கூட ஓடிடி தளத்தில்தான் வெளியாகப் போகிறது. இப்படி தனுஷின் நான்கு படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வருவதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம்தான் தியேட்டர்களில் வெளியாக உள்ள படமாக அமையலாம். அந்தப் படம் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.