• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ரூ.11 கோடி நலத்திட்டம்

ByT.Vasanthkumar

Apr 27, 2025

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 10 பணியாளர்களுக்காக, நேரடியாக அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, அவர்களுக்கு வழங்கும் விழா, ஏப்ரல் 27, 2025 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் அய்யா இந்த விழாவிற்கு தலைமை வகித்து வீடுகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

“இது ஒரு சாதாரண திட்டமல்ல இது ஒரு மனிதநேயம் சார்ந்த வரலாறு!” இன்றைய நாள் என் வாழ்வின் மிக முக்கியமான நாளாக கருதுகிறேன். இன்று, இவ்வளவு நாட்களாக நம் நிறுவன வளர்ச்சிக்காக உழைத்த நம்முடைய பணியாளர்களுக்காக வீடுகளை கட்டி கொடுக்கிறோம். உண்மையிலேயே இன்று நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்றைய நிகழ்வு ஒரு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் செயல். அதேநேரம், இது ஒரு பெரும் பொறுப்பு என்று நான் கருதுகிறேன். நாம் பல கல்லூரிகளை கட்டுகிறோம், பல்கலைக்கழகங்கள் கட்டுகிறோம், தொழிற்சாலைகள் உருவாக்குகிறோம். ஆனால், அவைகளை உருவாக்க பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு வீடு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோமா? இன்று அந்த கேள்விக்கு நாங்கள் செயலில் பதில் சொல்கிறோம் என்று பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம். 10 பணியாளர்களுக்காக 5 சென்ட் நிலத்தில் இரண்டு படுக்கை அறை மற்றும் நவீன வசிதிகளுடன் தலா 1.1 கோடி ரூபாய் வீதம் மொத்தம் ரூ 11 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகள், அவர்களின் பெயரில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இது ஒரு பரிசு என்று நான் கருதவில்லை. இது அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்று கருதுகிறேன். மேலும், ஏற்கனவே நமது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்காக, பசுமை வீட்டுத் திட்டத்தின் கீழ், பெரும் நிதியுதவியுடன், நமது பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடிக்கு மேல் வழங்கி, 20 வீடுகள் கட்டப்பட்டு அவர்களின் பெயரில் பதிவு செய்து வழங்கப் பட்டுள்ளதையும் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றுள்ளேன். ஆனால் இன்று எனக்கு கிடைத்த சந்தோஷம், எந்த விருதும் தராத மகிழ்ச்சியை தருகிறது.
நமது பல்கலைக்கழகம் கல்வியை மட்டுமல்ல, மனிதநேயத்தையும் கற்பிக்கிறது. இன்றைய இந்த செயல், அதற்கான நம்முடைய சின்ன முயற்சி. கல்வியும், கருணையும் சேர்ந்தால்தான் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே மாணவர்களின் நலன் கருதி பல்வேறு உதவித்தொகைகள் வழங்கி வருகிறோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவ உதவிகள் கட்டமின்றி அளித்து வருகிறோம். மதவேறுபாடு இல்லாமல் பல்வேறு ஆன்மீக தொண்டுகளை செய்து வருகிறோம். இவை அனைத்தும் எனது தனிப்பட்ட சாதனைகள் என்று கூறமாட்டேன். இவைகள், நம்முடன் சேர்ந்து பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் சாதனை என்றே சொல்வேன். இன்றைய நிகழ்வு என்பது ஒரு தொடக்கமே.. இன்னும் நாங்கள் பணியாளர்களின் நலனுக்காக செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான செயல் திட்டங்களை வகுத்து கொண்டுயிருக்கிறோம். மீண்டும் என் பணி தொடரும் என தெரிவித்தார் வேந்தர் சீனிவாசன்

உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிவரும், இந்த நிறுவங்கள் மூலம், கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு இரண்டு கோடிக்கு மேல் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது, மருத்துவ உதவிகள், ஆன்மீக தொண்டுகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு பல கோடிக்கு மேல் வழங்கப்படுகிறது, இந்த நிறுவனங்களில் நேரடியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மறைமுகமாக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். வேந்தர் அவர்களின் மாபெரும் கல்வி சேவையினை பாராட்டி புதுகோட்டைஇலக்கிய மன்றம் இவருக்கு வாழ்நாள் சாதனனயாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. திருச்சி அண்ணா தொழில்நுட்ப கழகம், இவரின் சிறந்த பங்களிப்பிற்காக, இவரை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவின் உறுப்பினராக மேதகு டாக்டர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் கவர்னாக உள்ள போது அளித்தது. டைம்ஸ் ஆப் இந்தியா –இவரின் கல்வி சேவையை பாராட்டி ப்ளாஸிர் அவார்ட் வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச ரோட்டரி 3000 சங்கம் இவருக்கு மற்றுமொறு வாழ்நாள் சாதனனயாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்தை வழங்கி கௌரவித்துள்ளது. துபாயில் நடைபெற்ற இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிராட் காஸ்ட் இன்ஜினியரிங் கண்சல்டன்ட், இந்தியா லிமிடெட், அப்சர்வர் டவன் என்ற மாத இதழ் நடத்திய உச்சி மாநாடு மற்றும் விருதுகள் 2022 விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, பொறியியல் கல்லூரியின் உச்சபட்ச பங்களிப்பினை பாராட்டும் விதமாக எஜூ ஐகான் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. 30 வருட கல்வி சேவைவை பாராட்டி தனலட்சுமி திருச்சி ஜமால் முகமது கல்லூரி சார்பாக 2024 ஆண்டிற்கான ஜமாலியன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் சார்பாக 2022 -2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப திறன் விருதினை, கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பசவேஷ்வர் சுகர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பெற்று கொண்டார். நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக 2024 ஆம் ஆண்டு தனலட்சுமி சீனிவாசன் குழும மருத்துவமனைகளுக்கு பெரம்பலூர் மற்றும் திருச்சி பகுதிகளில் குறைந்த செலவில் நிறைவான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த சாதனைக்களுகெல்லாம் சொந்த காரர் நம் மாண்பமை வேந்தர் அவர்கள் மட்டுமே.

.இந்த நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலர் நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர், புல முதல்வர்கள், பேராசிரியர்கள், மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், புல முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை கலந்து கொண்டனர்.