திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை பக்தர்கள் துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று கன்னிமார் தீர்த்தம் அழைத்து வந்தனர் .

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
15 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






