சட்ட விரோத காவலில் வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக மதியம் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். -பாஜக முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன் கணேஷ் பேட்டி,

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கைது குறித்து விவரங்கள் கேட்பதற்காக திருப்பரங்குன்றம் காவல் நிலையம் வந்த பாஜக முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன் கணேஷ் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐயப்ப ராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
தொடர்ந்து பாஜக முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் முருகன் கணேஷ் கூறுகையில்:

உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கார்த்திகை தீபம் ஏற்ற வந்த கட்சியினரை 12 பேரை பட்ட விரோதமாக கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் நிலைமையை பார்க்க வந்தோம் ஆனால் காவல்துறையினர் மேல் இடத்திலிருந்து உத்தரவு வரவில்லை அதற்காக காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் மேல் இடத்தை உத்தரவு எங்கிருந்து வரவேண்டும் என்று எங்களுக்கு புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு இருந்த நிலையில் தீபம் ஏற்றுமவரை எந்த தடையும் இல்லை அதற்காக வந்தவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை இது சட்ட விரோத காவலில் வைத்திருக்கிறார்கள் இது தொடர்பாக மதியம் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். உயர்நீதிமன்ற அடிப்படையில் தான் சென்றமைத் தவிர சட்டத்திற்கு புறம்பாக நாங்கள் செயல்படவில்லை என்றும் கலவரம் விளைவிக்கும் உள்நோக்கம் இல்லை பக்தி அடிப்படையில் தீபம் ஏற்ற சென்ற எங்களை தடுத்து நிறுத்தியது யார் என்று தவறு என்று நீதி அரசரிடம் முறையிட செல்கிறோம் என கூறினார்.








