இந்திய சுதந்திர தினமான இன்று கன்னியாகுமரியை அடுத்துள்ள மீனவ கிராமம் ஆன ஆரோக்கியபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பள்ளியில் நடந்த விழாவில். பள்ளி தாளாளர் அருட்பணி. கிங்ஸ்லிஷாஜி, கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில். கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் தேசிய கொடியேற்றினார். நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்திற்கு எவரும் அடிமையாக கூடாது.எங்காவது போதை பொருட்களை மறைத்து வைத்து யாராவது விற்பனை செய்வது, அதிலும் மாணவர்களிடம் விற்பனை செய்தால் உங்கள் வகுப்பு ஆசிரியரிடமோ அல்லது எனக்கோ(காவல்துறைக்கு( நீங்கள் தகவல் கொடுத்து இளமை பருவத்திலே பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாகவும்,சமுகத்திற்கு உதவும் நிலையில் உயரவேண்டும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவரது பேச்சில் தெரிவித்தார்.

கலப்பை மக்கள் இயக்க தலைவர் அவரது சொந்த செலவு ரூ.12_லட்சத்தில் ஆரோக்கியபுரத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை பள்ளிக்கு கலையரங்கை கட்டி கொடுத்தார். சுதந்திர தினம் ஆன இன்று அந்த கலையரங்கம் பள்ளி மாணவர்களின் தேவைக்கு திறந்து வைத்தார்.

நிகழ்வினை வாழ்த்தி,சென்னையிலிருந்து திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர் என்னும் பல்துறை வித்தகர் டி.ராஜேந்தர் கைபேசியில் விடியோ காட்சி மூலம் மீனவசமுகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன். மீனவர்கள் வாழ்க்கை அலை கடலில் தினம் பயணித்து ஒவ்வொரு நாளும் கரை திரும்புவது வரை ஒரு பெரும் போராட்டமே. இப்பள்ளியில் இன்று பயிலும் மீனவ சமுகத்தை சேர்ந்தவர் கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தி எதிர்காலத்தில் அரசின் உயர் நிர்வாக பணிகளுக்கு வரவேண்டும் என அவரது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மாணவர்களின் கண்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் . ஐக்கிய நாட்டு சபையின் முன்னாள் முதன்மை ஆலோசகர் முனைவர். ஜெபமாலை, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முனைவர். ஜான்சன், கலப்பை அமைப்பின் குமரி மாவட்ட தலைவர்.வழக்கறிஞர். பாலகிருஷ்ணன் மற்றும் ஆரோக்கிய அன்னை ஆலைய பங்கு பேரவையினர், பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர்.

